ஈ சாலா கப் நமதே

ஈ சாலா கப் நமதே

மோடி இரண்டாவது முறையாக‌ பதவியேற்கிறார் என்கிற தேசிய செய்தியைக் காட்டிலும், நேசமணிக்காக வேண்டுதல் செய்யும் மாநில செய்தி உலக செய்தியாகிவிட்டதால், உலககோப்பை கிரிக்கெட் ஆரம்பிக்கும் உலகச் செய்தி உள்ளூர் செய்தியாககூட பேசப்படவில்லை. நேசமணி விரைவில் குணமடைய ஓரிரு மணித்துளிகள் அமைதியாக வேண்டிவிட்டு, இன்று துவங்கும் உலகக்கோப்பைப் பற்றி ஒரு ரைட்டப் போடுவோமா?

Cricket teams with Queen

கடந்த நான்கு தடவைகளாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பையின் இன்றைய‌ முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்தும், கண்டிப்பா செமி-ஃபைனலுக்கு வருவாங்க, அந்த மேட்ச்ல தோத்துடுவாங்க- என நம்பப்படுகிற தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. இது 12ஆவது உலகக்கோப்பை. உச்சபட்சமாக 5 முறை கோப்பையை வென்று, வேர்ல்ட் கப்-னா நாங்கதான், நாங்கதான் வேர்ல்ட் கப் என கெத்து காட்டும் ஆஸ்திரேலியா ஒருபக்கம், பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என மூன்று ஏரியாவிலும் ஃபுல்ஃபார்மில் இருக்கும்போது, கூடவே சொந்த ஊர் அட்வான்டேஜும் சேர்ந்து அசுரபலத்தில் இருக்கும் இங்கிலாந்து ஒருபக்கம் என இந்தமுறை போட்டி சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை.

முதல் பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்து நமது படையை புறமுதுகிட்டு ஓடவைத்தது கண்முன் வந்து சென்றாலும், வங்கதேசத்தை வெளுத்து ஃபார்முக்கு திரும்பி இருப்பதை நினைத்து சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். கடந்தமுறையைப்போல் அணிகளை இரு பிரிவுகளாக பிரித்து அவர்களுக்குள் மோதவிடாமல், இந்தமுறை ரவுண்ட் ராபின் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது, பங்கேற்கும் பத்து அணிகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் மோதவேண்டும். முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி, பின் இறுதிப்போட்டி என மாற்றப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அணியும் எதிரணியை வீழ்த்துகிறதா வீழ்கிறதா என்பதை பார்க்க முடியும்.

Indian Team

போட்டிப்பரிசுத்தொகையான 28 கோடியைவிடவும், அந்த 2 அடி உயர கோப்பைதான் முக்கியம். நம்ம டீம்ல இருக்குற நல்ல பழக்கமும் கெட்ட பழக்கமும் ஒன்றுதான். அது, முதல்ல இறங்குற ஒருத்தன் அடிச்சான்னா எல்லாரும் வரிசையா அடிப்பானுங்க, ஒருத்தன் அவுட்டானா வரிசையா அவுட்டாவுனுங்க.  வரிசையா அடிக்கிறாங்களா இல்ல அடிவாங்குறாங்களான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!