ஈழத் தமிழர்களுக்கு ரகசியமாக செய்த உதவியை போட்டுடைத்த சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

ஈழத் தமிழர்களுக்கு ரகசியமாக செய்த உதவியை போட்டுடைத்த சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

சிறிய உதவி செய்தாலும் அதை படம் எடுத்து தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிடும் பிரபலங்கள் அதிகம். ஆனால், சூப்பர் சிங்கர் புகழ் கணேஷ் – ராஜலட்சுமி தாங்கள் செய்த உதவிகளைப் பற்றி இப்படி அலட்டிக்கொண்டதில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் அண்மையில் லண்டன் சென்று வந்தனர். லண்டனில் எடுத்த புகைப்படங்களை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். அந்த படத்தைப் பார்த்த ஒருவர், இவ்வளவு செலவு செய்து லண்டன் செல்ல வேண்டுமா… அதற்கு பதில் ஈழத்து ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாமே என்று கேட்டிருந்தார்.

லண்டன் சென்று வர செலவு செய்ததற்கு பதில் ஈழத் தமிழர்களுக்கு உதவியிருக்கலாமே என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ததால், தான் ரகசியமாக செய்த உதவி பற்றிய விவரத்தை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் வெளியிட்டுள்ளார்.
சிறிய உதவி செய்தாலும் அதை படம் எடுத்து தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிடும் பிரபலங்கள் அதிகம். ஆனால், சூப்பர் சிங்கர் புகழ் கணேஷ் – ராஜலட்சுமி தாங்கள் செய்த உதவிகளைப் பற்றி இப்படி அலட்டிக்கொண்டதில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் அண்மையில் லண்டன் சென்று வந்தனர். லண்டனில் எடுத்த புகைப்படங்களை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். அந்த படத்தைப் பார்த்த ஒருவர், இவ்வளவு செலவு செய்து லண்டன் செல்ல வேண்டுமா… அதற்கு பதில் ஈழத்து ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாமே என்று கேட்டிருந்தார்.

senthil-ganesh-and-rajalakshmi at london

இதற்கு செந்தில் கணேஷ் பதில் கூறியுள்ளார். அதில், “லண்டன் பணத்தை பதிவிட்டதில் ஒரு நபர் கேட்டிருக்கிறார். இதற்கு செலவழிப்பதற்கு ஈழத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவலாமே என்று. உங்களைப் போன்றோர் தெரிந்துகொள்ளட்டுமே என்பதற்காகத்தான் இந்த பதிவு. கிடைத்த வருமானத்தில் ரூ.50 ஆயிரத்தை (இந்திய ரூபாய்) ஈழத்து ஏழைப் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக ஈழத்துப் போராளி ஈழவன் எனும் ஈசன் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்த தருணம். (இது போன்ற செய்திகளை பதிவிட விரும்புவது இல்லை. உங்களைப் போன்றவர்களுக்காக இந்த பதிவு)” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஃபேஸ்புக்கில் இதுவரை செந்தில் கணேஷ் மற்றும் ராமலட்சுமியை விமர்சித்து வந்தவர்கள் கூட பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.