ஈரான் ஜிம்மில் விஜய் பாடலுக்கு நடனமாடிய  மக்கள்: வைரல் வீடியோ 

 

ஈரான் ஜிம்மில் விஜய் பாடலுக்கு நடனமாடிய  மக்கள்: வைரல் வீடியோ 

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரை பற்றி தினம்தோறும் எதாவது ஒரு செய்தி வெளியாகாத அதை வைரலாக முடியாத என்று தளபதி ரசிகர்கள் காத்துக்கொண்டே இருக்கின்றனர். அதுவும் இவரின் படம் குறித்த அப்டேட் எதாவது வெளியானால் அதை உலகம் முழுக்க ட்ரெண்ட் செய்து விஜய் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது ஈரானில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியின் போது மக்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏன் அந்த வீடியோ வைரலாகிறது? அதற்கு என்ன காரணம் என்றால் அந்த ஜிம்மில் அனைவரும் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். 

அது என்ன பாடல் என்றால் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இடம்பெற்ற ’மாம்பழமா மாம்பழம்’ பாடல். இந்த பாடல் அந்த படம் வெளியான சமயத்தில் அனைவரது favourite-டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் ஜிம்மில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.