ஈரானில் மீண்டும் நிலநடுக்கம் – 5.7 ரிக்டராக பதிவு

 

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம் – 5.7 ரிக்டராக பதிவு

ஈரானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

தெஹ்ரான்: ஈரானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கி – ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ்-இ-ஒலியா என்ற இடத்தை மையமாக கொண்டு நேற்று ஈரான் நேரப்படி காலை 9.23 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஈரான் எல்லையில் உள்ள துருக்கியின் வான் மாகாணத்தின் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ttn

இந்த நிலையில், அதே குவடூர் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 4 மணியளவில் (ஈரான் நேரப்படி இரவு 7.30 மணி) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமும் 5.7-ஆக பதிவானது. இந்த சம்பவத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வீடுகள் மீண்டும் இடிந்து விழுந்தன. மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் இந்த மாகாணம் அமைந்துள்ளதால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.