ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்துவிட்டோம்! – வைகோவுக்கு வெளியுறவுத் துறை பதில்

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கே இருக்கின்ற இந்திய மீனவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் நாடு திரும்புவதற்கு, விமானம் அல்லது கப்பலை அனுப்புமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். 

ஈரானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வைகோவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

vaiko-0

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கே இருக்கின்ற இந்திய மீனவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் நாடு திரும்புவதற்கு, விமானம் அல்லது கப்பலை அனுப்புமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். 
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களை மீட்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் உடனே திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது