இ.எம்.ஐ தவணை, பள்ளி கட்டணங்கள் உள்ளிட்டவற்றை ஆறு மாதம் ஒத்திவைக்க வேண்டும்! – ராமதாஸ், அன்புமணி வலியுறுத்தல்

 

இ.எம்.ஐ தவணை, பள்ளி கட்டணங்கள் உள்ளிட்டவற்றை ஆறு மாதம் ஒத்திவைக்க வேண்டும்! – ராமதாஸ், அன்புமணி வலியுறுத்தல்

பள்ளி கல்விக் கட்டணம், இ.எம்.ஐ, மாதத் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பள்ளி கல்விக் கட்டணம், இ.எம்.ஐ, மாதத் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா வைரஸ்: பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், வட்டியையும் ரத்து செய்யவேண்டும்.

ttn

EMI, காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், பள்ளிக்கல்விக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் கருத்தை ரீட்வீட் செய்யாமல், ராமதாஸ் பதிவில் உள்ள கருத்தை எடுத்து அன்புமணி ராமதாசும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.