இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி: டிடிவி தினகரன் கண்டனம்!

 

இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி: டிடிவி  தினகரன் கண்டனம்!

இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். நள்ளிரவைத் தாண்டிய இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.   இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். நள்ளிரவைத் தாண்டிய இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

ttn

பிராட்வே, திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட  இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய பெருமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு,போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு  இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.