இவள்தந்தை என் நோற்றான் கொல்!

 

இவள்தந்தை என் நோற்றான் கொல்!

இளைய மகளையும் மகனையும் சட்டம் படிக்க வைத்து தன் பால்யகால ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் விட்டகுறை தொட்டகுறை. மகளும் மகனும் சேர்ந்து அப்பாவுக்கும் அதே கல்லூரியில் அவரையும் சேர்த்துவிட, மகளுக்கு ஜூனியராக அதே கல்லூரியில் சேர்ந்து தன் கனவை நனவாக்கி வருகிறார்.

இவள்தந்தை என் நோற்றான் கொல்!

மும்பை சட்டக்கல்லூரியில் ஒரு தகப்பன் தன் மகளை கல்லூரிக்கு காரில் கொண்டு வந்து விடுகிறார். இதான் நியூஸ். லூஸாப்பா நீ? அப்பன் புள்ளையை கொண்டுவந்து பள்ளிகூடத்துல, காலேஜ்ல விடுறதுல என்ன பெரிய நியூஸ்? என்னமோ எட்டு மணிக்கு டிவியில மோடி திடீர்னு வந்து நின்னுகிட்டு சொல்ற நியூஸ் அளவுக்கு அவ்ளோ வொர்த் இல்லையே? அப்பாவும் அந்தக்கல்லூரி உறுப்பினர்தான். அப்பா புரஃபசரா வேலை பாக்குற காலேஜ்ல பொண்ணு படிக்கிது, அதுக்கு என்னா இப்போ? இல்லை, அவரும் அதே காலேஜில் படிக்கிறார். லேட் அட்மிஷனா இருக்கும், அவர் ஃபைனல் இயர், அவர் பொண்ணு ஃபர்ஸ்ட் இயர், என்னா இப்போ? இல்லை, அவர் மகள் இரண்டாம் வருடம், அப்பா முதல் வருடம்! ஆமாம்ப்பா, நல்ல நியூஸ் மாதிரிதான் இருக்கு, என்ன எஸ்.டி.டி.?

’’ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்றொரு ஃபேஸ்புக் பக்கம், அதில் தன் தந்தையைப் பற்றி மகள் எழுதியிருக்கும் செய்திதான் மேலே சொன்ன நியூஸ். அவரது தந்தைக்கு சின்ன வயதில் சட்டம் படித்து நேர்கொண்ட பார்வை பரத் போல வழக்காட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது, குடும்ப சூழ்நிலையால் அவரால் சட்டம் படிக்க முடியவில்லை. வளர்ந்து நல்ல நிலைக்குவந்தபின், தன் மூத்த மகளை டாக்டராக்கிய அவர், இளைய மகளையும் மகனையும் சட்டம் படிக்க வைத்து தன் பால்யகால ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் விட்டகுறை தொட்டகுறை. மகளும் மகனும் சேர்ந்து அப்பாவுக்கும் அதே கல்லூரியில் அவரையும் சேர்த்துவிட, மகளுக்கு ஜூனியராக அதே கல்லூரியில் சேர்ந்து தன் கனவை நனவாக்கி வருகிறார். ஜூனியரை சீனியர் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ரேகிங் செய்தார்களா என்ற தகவல் இல்லை.