இவரும் நானும் தான் வெற்றிக்கு காரணமாக இருந்தோம் – ஆட்டநாயகன் ரோகித் பேட்டி!

 

இவரும் நானும் தான் வெற்றிக்கு காரணமாக இருந்தோம் – ஆட்டநாயகன் ரோகித் பேட்டி!

இந்திய அணியில் இவரும் நானும் ஆடிய விதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்ற வைத்திருக்கிறது என துவக்க வீரர் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

குறிப்பாக பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ரன்கள் குவித்தது. அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி 131 ரன்கள் குவித்தார். 

AUSvsIND

சற்று சிக்கலான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் களம் கண்டனர். இதில் இரண்டு போட்டிகளில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் கட்டாயம் நன்கு ஆட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டார். 

இதனை அனுபவத்தின் மூலம் சிறப்பாக எதிர்கொண்டு சதம் விளாசினார் ரோகித் சர்மா. கேஎல் ராகுல் ஆட்டமிழந்த பிறகு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் அவருக்கு பக்கபலமாக நின்று அரைசதம் கண்டார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி சேர்ந்து 137 ரன்கள் குவித்தனர்.

ரோகித் சர்மா 119 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 89 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அதன்பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், 

“இந்திய அணி இதுபோன்ற சூழல்களை பலமுறை சந்தித்திருக்கிறது. சேசிங் செய்வதில் இந்திய அணியின் ஆட்டத்திறன் அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக மூன்றாவது போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு நானும் விராட் கோலியும் ஆடிய விதம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என நினைக்கிறேன். அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர் கொண்டு காத்திருக்கிறேன். அதற்கு முன்னர், உடல் நிலையை சரியாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் மைதானத்தில் அடிக்கடி காயம் காரணமாக வெளியேறுவதை காணமுடிகிறது.” என்றார்.