இளையராஜாவால் வருமானத்தை இழந்து நிற்கும் கவிஞர்கள்?

 

இளையராஜாவால் வருமானத்தை இழந்து நிற்கும் கவிஞர்கள்?

இசைஞானி இளையராஜா தனது பாடல்களின் ராயல்டி உரிமை தனக்கே என்று கூறியிருப்பது,  அவர் இசையில் பாடல் எழுதிய கவிஞர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

சென்னை: இசைஞானி இளையராஜா தனது பாடல்களின் ராயல்டி உரிமை தனக்கே என்று கூறியிருப்பது,  அவர் இசையில் பாடல் எழுதிய கவிஞர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

இதற்கு முன்பு  ஐ.பிஆர்.எஸ் என்கிற அமைப்பு பாடல் எழுதிய கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் உரிய தொகையை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது  மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ காசோலை மூலம் கொடுத்து வந்தது. இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்து கைகொடுத்தது. ‘இந்தியன் பெர்ஃபாமிங்    ரைட் சொஸைட்டி’ என்ற அமைப்பு  இந்திய அலவில் இயங்கு ஒரு அமைப்பு அரசின் கண்கானிப்போடு இயங்கும் இந்த அமைப்பு மும்பையை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  

திரைப்படங்களின் பாடல்கள் எங்கெல்லாம் ஒலிபரப்பாகிறது  என்பதை  தனது கிளை நிறுவனங்களின் மூலமும், தனது நிர்வாகிகள் மூலமும் கண்டறிந்து எந்தப் பாடல் எங்கு ஒலிபரப்பானது என்பதை தேதி நேரம் இடம் ஆகிய விபரங்களுடன், அந்த ஒலிபரப்புக்கான காசோலையோடு  பாடல் எழுதிய கவிஞர்களுக்கு அனுப்பி வைக்கும்.  இந்தத்தொகை அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்து வந்தது.
 
ஆனால் இன்று இளையராஜா ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறியிருப்பது அவர்  இசையில்  பாடல் எழுதிய கவிஞர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு செய்து வந்த இந்த வேலையை இனி இசையமைப்பாளர்கள் சங்கம் செய்யும் என்று ராஜா குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த கண்கானிப்பு வேலை என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. 

இந்தியா முழுக்க உள்ள ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தனது அனுபவம் உள்ள ஆட்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பாவதை எளிதாக கண்டுபிடித்து அவர்களிடம் சிரத்தையுடன் தொகையை வசூலித்துக் கொடுக்கும். இதை புதிதாக களம் இறங்கும் யாரும் எளிதாக செய்துவிட முடியாது. இன்றைய சூழலிலேயே ராஜாவின் இசையில் பாடல் எழுதிய கவிஞர்களுக்கு எப்போதும் வரும் தொகையின் அளவு பெரிய அளவில் குறைந்து போயிருக்கிறதென்று கூறுகிறார்கள். 

இளையராஜா இசையில் குறிப்பிட்ட சில கவிஞர்கள்தான் தொடர்ந்து பாடல்களை எழுதிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் அந்த பெரிய இழப்பை சந்தித்திருக்கிறார்கள். இந்த இழப்பை கவிஞர்களுக்காக எப்படி சரி செய்து கொடுக்கப்போகிறார் இளையராஜா என்பதுதான் திரையுலகினர் பலரின் கேள்வியாக உள்ளது.