இளைச்சாலும் விஜயகாந்துக்கு எம்பூட்டு ஆசை… வீட்டிற்குள் வைத்தே வெலவெலக்கச் செய்த பிரேமலதா..!

 

இளைச்சாலும் விஜயகாந்துக்கு எம்பூட்டு ஆசை…  வீட்டிற்குள் வைத்தே வெலவெலக்கச் செய்த பிரேமலதா..!

அவரது வீடிற்குள் இருக்கும்போதே வாக்குறுதி கேட்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. இதெல்லாம் பிரேமலதாவின் தூண்டுதல்தான்…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியில் உள்ள  விக்கிரவாண்டி தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. 

vijayakanth

அதனை மனதில் வைத்து விஜயாகாந்தை நேரில் சந்தித்து பேசினார்கள் அதிமுக அமைச்சர்கள். அப்போது  அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிக்க விஜயகாந்த் இரண்டு நிபந்தனைகளை விதித்திருகிறார்.  உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்களை தங்கள் கட்சிக்கு வழங்க வேணடும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர்களின் செலவை, அ.தி.மு.க., ஏற்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டை இப்பவே முடிவு செய்து விடுங்கள் ஆதரவு தருகிறோம். சென்னை அல்லது சேலம் மேயர் பதவியை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும்  என  நிபந்தனைகள் விதித்திருக்கிறார் விஜயகாந்த்.

vijayakanth

இதற்கு சம்மதித்தால், இடைத்தேர்தலில் ஆதரவளிப்பதாக, அவர் கூறியதாக தெரிகிறது. இது குறித்து, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து விட்டு, முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறி எஸ்கேப் ஆகி இருக்கின்றனர். வெளியே வந்த அமைச்சர்கள், அவரது கட்சிக்கு விழுந்த வாக்குசதவிகிதம் தேமுதிக இளைத்து விட்டதை நிரூபித்து வருகிறது.

 premalatha

அதைத் தெரிந்தும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை கேட்பதெல்லாம் பேராசை. அதுவும் அவரது வீடிற்குள் இருக்கும்போதே வாக்குறுதி கேட்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. இதெல்லாம் பிரேமலதாவின் தூண்டுதல்தான்… என முணுமுணுத்தபடியே வீட்டை விட்டு வெளியேறினர்.