இளம்பெண்களின் கனவுகள் எனக்கில்லை: மனம் திறந்த பி.வி.சிந்து

 

இளம்பெண்களின் கனவுகள் எனக்கில்லை: மனம் திறந்த பி.வி.சிந்து

இளம் பெண்களின் கனவு எனக்கு இல்லை என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்

ஹைதராபாத்: இளம் பெண்களின் கனவு எனக்கு இல்லை என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடிய உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தோரின் இறுதிப் போட்டியில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட இந்தியாவின் பி.வி.சிந்து, 21-19, 21-17 என்ற நேர் செட்டில் ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில், இந்தியர் ஒருவர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். 7 தொடர்களின் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த சிந்து, இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இறுதிப்போட்டிகளில் ஏன் எப்போதும் தோற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். அதனால் தான் நானும் எனக்குள் இறுதிப்போட்டியில் தோற்பது ஏன் என்று கேட்க வேண்டி இருந்தது. இவற்றுக்கு ஒரு வழியாக இப்போது விடை கிடைத்து விட்டது என்றார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பெட்டி ஒன்றில், மற்ற இளம்பெண்களின் கனவு எனக்கு இல்லை என்றார். 23 வயது இளம்பெண்களின் வாழ்க்கையை உங்களால் வாழமுடியாது; நீங்கள் வெளியே செல்லமுடியாது என்று சிலர் சொல்லலாம். அது உண்மைதான். என்னால் முடியாது. என்னை எல்லோருக்கும் தெரியும்; நான் சென்றால் அடையாளம் கண்டுகொள்வர். ஆனால், அந்த இனர்வு அலாதியானது என்றும் சிந்து தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா உங்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சிந்து, தானும் அதைக் கேள்விப்பட்டதாகவும், ஆனால் அதற்கு தன்னுடைய பதில் இல்லை என்பதே. இப்போதைக்கு தனக்கு பேட்மிண்டன் தான் எல்லாமே என்றும் தெரிவித்தார்.