இல்லத்தரசிகளே ‘சிக்’கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்… இதோ!

 

இல்லத்தரசிகளே ‘சிக்’கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்… இதோ!

 பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?

 பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?

ஓரிடத்தில் நிற்காமல் பரபரவென நீங்கள் ஓடியாடி வேலை செய்யலாம், வீட்டில் எல்லோரையும் கவனித்துக் கொள்ளலாம், இருந்தபோதிலும் உங்களின் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்புச் சதை குறையவே குறையாது. அநேகமாக, உங்களின் சீரற்ற உணவுப்பழக்கத்துக்கு, ஓர் இடைவெளி விட இது தகுந்த நேரமாக இருக்கலாம். ஒரு பிசியான இல்லத்தரசிக்கு, எந்த பாதிப்பும் இன்றி, அவரது பிசியான வேலைநேரத்தை இடையூறு செய்யாமல், அதேசமயம், அவரது உடல் பருமனை குறைக்க, தனித்துவமான எடைக் குறைப்பு திட்டம் தேவை.

இல்லத்தரசி எனும் கயிற்றுமேல் நடக்கும் பொறுப்புக்கு இடையே, பழைய உடல் தோற்றத்தை மீட்டெடுக்க நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

1. சரியான காலை உணவு சாப்பிட வேண்டும்

fs

ஒரு நாளின் முக்கிய உணவு என்று காலை உணவைச் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அன்றைய நாளின் வேலைகளை செய்யத் தேவையான ஆற்றலை காலை உணவு உங்களுக்கு தருவதோடு, நாள் முழுக்க கலோரிகளை எரிக்கத் தேவையான அவகாசமும் கொடுக்கிறது. அதேசமயம், மதிய நேரத்தில் உங்களுக்கு பசி எடுக்காவிட்டாலும், ஏதேனும் ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் போதும். ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இட்லி, தோசை அல்லது தானியச்சத்து நிறைந்த ரவை/கோதுமை உப்புமா, அவல் உப்புமா போன்றவற்றையே காலை நேரத்தில் சாப்பிட வேண்டும். காலத்தை கடந்து நிற்கும் இத்தகைய இந்திய உணவு வகைகள், உடலில் கொழுப்பு சேராமல், போதுமான ஆற்றல் தர வல்லவை.

2. சாப்பாட்டை புறக்கணிக்கக்கூடாது

ஒரு வேளை நன்கு சாப்பிட்டுவிட்டதால், அடுத்த வேளை சாப்பாடு தேவையில்லை என்று புறக்கணிப்பது சரியல்ல. ஏனெனில், திடீரென பசி ஏற்பட்டு, கலோரி நிறைந்த உணவை சாப்பிடும் நிலை ஏற்படும். மேலும், வழக்கமாகச் சாப்பிடுவதை விட, அதிக அளவு சாப்பிட நேரிடும். சீரான இடைவெளியில், 3 வேளையும் சாப்பிடுவதால், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகி, எடை குறைய உதவும். ஆயுர்வேத வழியில் வாழ்க்கையை வாழலாம் – ஒரு ஆரோக்கியமான உடலுக்கு, ஃபிரெஷ்ஷான மூலப்பொருட்கள் சேர்த்து எளிதாகச் சமைத்த உணவு வகைகள் மற்றும் ஒரு கோப்பை மோர் போதுமானது.

3. நிறைய நடக்கலாம்

ZdF

லிஃப்டிற்கு பதிலாக, படிக்கட்டுகளை பயன்படுத்த மறந்துவிடாதீர். ஷாப்பிங் போனால், வாகனத்தை ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து, கடைக்குள் போகலாம். ஒரு நீண்ட நாள் முடிந்ததும், மாலை நேரத்தில், வீட்டின் அருகே உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வது ரிலாக்ஸ் தருவதோடு, தொப்பை விழாமல் தடுக்கவும் உதவும்.

4. சோம்பல் பழக்கத்திற்கு இடம் தரக்கூடாது

உங்களின் கைக்குழந்தை பிற்பகலில் துயில் கொள்வதால், நீங்களும் கூட படுத்து உறங்கக்கூடாது. அந்த நேரத்தை தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இதேபோல, ஓரிடத்தில் அமர்ந்து உங்களின் தோழியுடன் ஃபோன் பேசாமல், நடந்துகொண்டே ஃபோனில் பேசுவது நல்லது. டிவி பார்த்தபடியே சாப்பிடுவதை புறக்கணியுங்கள். அப்படிச் செய்தால், உங்களுக்கே தெரியாமல், கூடுதல் நொறுக்குத்தீனிகளை சாப்பிட நேரிடும்.

5. போதிய உறக்கம் தேவை

sgdsfdfhh

உங்களின் குழந்தைகள் தூங்குவதைப் போல, நீங்களும் சராசரியாக 8 மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான், உங்களின் மன அழுத்தம் குறைவாக இருக்கும், சோர்வின்றி வேலை செய்யலாம், ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இரவில் போதிய அளவு தூங்காதவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வாழ்க்கை முறையில் ஏற்படும் சிறு மாற்றம், ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். படுக்கைக்கு அடியில் நீங்கள் நீண்ட காலமாக வைத்திருக்கும் எடை பார்க்கும் கருவியில் இந்த திருப்பம் எதிரொலிக்கும். தினந்தோறும் உடலுக்கு வேலை தருவது வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தும். அதனால், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, தரையை துடைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால், உங்களின் உடல் எடை குறையும். அப்புறம், இன்னும் எதற்காகக் காத்திருக்கீங்க?