இலங்கையை எரித்தது அனுமன் அல்ல | வேறு யார் செய்தார்கள்?

இலங்கையை எரித்தது அனுமன் அல்ல | வேறு யார் செய்தார்கள்?

இராமாயண கதையை நன்கு அறிந்தவர்கள் அனைவருக்குமே,  இராவணனை வதம் செய்வதில் இராமருக்கு பேருதவியாக இருந்தது அனுமன் தான் என்று தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால், அசுரர்களின் அரசனான இராவணனின் அழிவு காலம், அனுமன் தன் வாலில் பற்ற வைத்த நெருப்பினால் இலங்கையை சின்னாபின்னமாக்கி, சூறாவளியாய் சுழற்றியடித்து  பற்ற வைத்த போது தான். ஆனால், அனுமன் இலங்கையை அப்படி செய்த சம்பவத்திற்கு பின்னால் பார்வதி தேவி கொடுத்த சாபம் ஒளிந்திருக்கிறது உங்களுக்குத் தெரியுமா? இலங்கையின் கோட்டை சரிவிற்கும், பற்றி எரிந்ததற்கும் பின்னால் பார்வதி தேவியின் சாபம் தான் காரணமாக இருந்திருக்கிறது. 

அசுரவேந்தன் இராவணனின் தவ வலிமையைப் பற்றி அனைவருக்குமே தெரியும். சிவபக்தியில் இராவணனை மிஞ்சியவர்கள் இந்த உலகில் எவருமில்லை என்று சொல்லும் அளவிற்கு சிவன் மீது பக்தியுடன் இருந்தான். நான்கு வேதங்கள், ஆயக்கலைகள் என அனைத்தும் கற்றறிந்த இராவணனின் தந்தை ரிஷி விஷ்ரவர். அதனால் இராவணன் பிறப்பால் ஒரு பிராமணன். ஆனால் இராவணனின் தாயார் அசுர குலத்தைச் சேர்ந்த கைகேசி ஆவார். இராவணனின் ஆட்சியில் இலங்கை பொன்னிலங்கையாக விளங்கியது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இலங்கையை பூலோக சொர்க்கம் என்று கூறும் அளவிற்கு அதன் வனப்பு மூவுலகையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் அவை அனைத்தும் இராவணனின் ஆணவத்தாலும், சுயநலத்தாலும் அழிந்தது.

ஈசனின் மனைவியான பார்வதிக்கு மாளிகை ஒன்று கட்ட வேண்டுமென்று ஆசை வந்தது. பார்வதியின் ஆசையை  உணர்ந்த ஈசன்,பார்வதியின் விருப்பப்படி பொன் மாளிகையை கட்டும் பொறுப்பை இராவணனின் சகோதரனான குபேரனிடம் ஒப்படைத்தார். குபேரனும் தன்னிடம் இருந்த கணக்கிலடங்கா செல்வத்தையும் விஸ்வகர்மாவின் துணையையும் கொண்டு ஒரு அற்புதமான மாளிகையை உருவாக்கினார்.
  
குபேரன் உருவாக்கிய மாளிகை காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பார்வதி தேவி அந்த மாளிகையின் அழகில் மெய்மறந்து போனார். சிவபக்தியில் சிறந்தவராகவும், அனைத்து வேதங்களையும் கற்று ஞானத்தில் சிறந்தவராகவும் விளங்கிய இராவணனுக்கு மாளிகையின் கிரக பிரவேச பூஜையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது இராவணனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

பூஜைக்கு வந்த இராவணன், பார்வதி தேவிக்காக கட்டப்பட்ட மாளிகையை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார். இதுபோன்றதொரு கோட்டையை தனக்காக கட்ட வேண்டும் என்று நினைத்த இராவணன் , பின் இந்த கோட்டையையே தன்னுடைய கோட்டையாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். எனவே அதற்கான திட்டத்தை தீட்டினார். அனைத்து கடவுள்களும், தேவர்களும் கூடியிருக்க பார்வதி தேவியுடைய மாளிகையின் கிரக பிரவேச பூஜை அசுர வேந்தன் இராவணனால் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின் தன் திட்டத்தை நிறைவேற்ற தயாரானான் இராவணன். பூஜை நடத்திய பிராமணருக்கு அவர் வேண்டும் தானத்தை தர வேண்டும் என்பது சாஸ்திரம் ஆகும். எனவே தனக்கு தட்சணையாக இந்த பொன்மாளிகை வேண்டும் என்று கேட்டான் இராவணன்.

சிவபெருமான் சற்றும் யோசிக்காமல் தனது அன்பான பக்தனுக்கு அவன் கேட்ட தானத்தை கொடுக்க ஒப்புக் கொண்டார். இதனை பார்த்த பார்வதி இது நயவஞ்சகம் எனவும், அநீதி எனவும் கூறினார். ஆனால் சிவபெருமான் தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. தனக்காக கட்டப்பட்ட மாளிகையில் மற்றவர் வாழப்போவதை பார்வதி தேவியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே இந்த மாளிகையை அழித்து விட்டு இராவணனுக்கு வேறு மாளிகையை கட்டித் தரும்படி கூறினார். ஆனால் சிவபெருமான் தன் வாக்கிலிருந்து பின்வாங்க முடியாது என்று கூறி பார்வதி தேவியை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றார். ஆனால் பார்வதி தேவி அங்கிருந்து விலகி தனிமையில் சென்றுவிட்டார்.

கோபம் குறையாத பார்வதி சிவனை அந்த கோட்டையை அழிக்கும் படி கூறினார். அதற்கு ஈசன் தீர்த்த யுகத்தில் தான் வானர அவதாரம் எடுக்கும் போது உனது கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று கூறினார். பார்வதி தேவியும் சிவனிடம் இருந்து பறிக்கப்பட்ட கோட்டையை அவரே அழிப்பார் என்று சாபமிட்டார். அதனால்தான் ஈசனின் அவதாரமான அனுமன் இராவணனின் கோட்டையை அழித்தார்.