இலங்கையில் மீண்டும் 144 தடை உத்தரவு

 

இலங்கையில் மீண்டும் 144 தடை உத்தரவு

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு இயல்பு நிலை மெதுவாக திரும்பிவரும் நிலையில் இன்று இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு இயல்பு நிலை மெதுவாக திரும்பிவரும் நிலையில் இன்று இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பட்டுள்ளனர். இந்த தாக்குல் முடிந்து பள்ளிகள், தேவாலயங்கள் ஆகியவை தொடங்க ஆரம்பித்து மெல்ல இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகளால் அந்நாட்டின் சிலாபம் நகரில் இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் ஹெட்டிபொல பகுதியில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.