இலங்கையில் பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு: மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

 

இலங்கையில் பலி  எண்ணிக்கை 310 ஆக உயர்வு: மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை சுமார் 310 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு:  இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை சுமார் 310 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

srilanka

இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் சரியாக காலை 8.45 மணிக்கு வெடிகுண்டுகள் வெடித்தன.  

srilanka

இந்த திட்டமிடப்பட்ட கொடூர தாக்குதலில் தேவாலயங்களில் பிரார்த்தனையில் பங்கேற்றிருந்த பலரும் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மீண்டும் பிற்பகல் 2  மணியளவில் தெஹிவளையில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

srilanka

இந்த தாக்குதலில் நேற்றைய நிலவரப்படி  சுமார் 290 பேர் உயிரிழந்ததுடன்,  500ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. உயிரிழந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், இந்தியா, போர்ச்சுக்கல், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

srilanka

இலங்கை மீதான இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறது. மேலும் நேற்று மாலை  மீண்டும் கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே வேனில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் எந்த உயிர்ப் பலியும் ஏற்படவில்லை. 

srilanka

இதைத் தொடர்ந்து இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக நேற்று  நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் சிறிசேன அவசர நிலையையும் அறிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

srilanka

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி  உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 310 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  7 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

srilanka

மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குத் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

இதை தொடர்ந்து  இந்த தொடர் குண்டு வெடிப்புத் தொடர்பாக, மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும்  அலட்சியமாக இருந்து விட்டதற்கு  இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்ன மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: கொழும்புவில் 9-ஆவது குண்டு வெடிப்பு – வீடியோ உள்ளே?