இலங்கையில் டி.டியை பார்த்து கண் கலங்கிய ரசிகை…கண்ணீரைத் துடைத்து விட்ட டிடி: வைரல் வீடியோ !

 

இலங்கையில் டி.டியை பார்த்து கண் கலங்கிய ரசிகை…கண்ணீரைத் துடைத்து விட்ட டிடி: வைரல் வீடியோ !

இவர் டேன்ஸ் ஷோ மூலம் திரைத்துறைக்கு வந்து தனது பேச்சு திறமையினால் சிறந்த தொகுப்பாளினியாக மாறியுள்ளார். 

வெள்ளித்திரை பிரபலங்களுக்கு ஈடாக சின்னத்திரை நடிகர்களும் உள்ளனர். சின்ன திரையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்னும் திவ்யதர்ஷினி. நிறையப் பேருக்கு அவரை திவ்யதர்ஷினி என்றால் தெரியாது, ஆனால்  டிடி என்றால் அனைவரும் அடையாளம் கண்டு கொள்வர். இவர் டேன்ஸ் ஷோ மூலம் திரைத்துறைக்கு வந்து தனது பேச்சு திறமையினால் சிறந்த தொகுப்பாளினியாக மாறியுள்ளார். 

ttn

நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் படங்களுக்கு டப்பிங் கொடுப்பது, படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பது என்று பிஸியாக உள்ளார் டிடி.

ttn

என்ன ஆனாலும், டிடி அவரை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். அது ஷோவாக இருந்தாலும் சரி, நேரில் இருந்தாலும் சரி. 20 வருட திரைத்துறை அனுபவத்தில், இவருக்கு நாடு முழுவதிலும் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

ttn

சமீபத்தில் இலங்கை சென்ற டிடி, அங்கு அவரின் ரசிகை ஒருவரைச் சந்தித்துள்ளார். அவரை பார்த்த உடன் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்து, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார் அந்த ரசிகை. அதனால், ஸ்தம்பித்து நின்ற டிடி, அந்த ரசிகையின் கண்ணைத் துடைத்து விட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘விலைமதிப்பற்ற உணர்வு’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba?Dance all The Way (@ddneelakandan) on