இலங்கையிலும் ‘தல அஜித்’துக்கு ரசிகரா? ஆச்சரியத்தில் நடிகை காயத்ரி

 

இலங்கையிலும் ‘தல அஜித்’துக்கு ரசிகரா? ஆச்சரியத்தில் நடிகை காயத்ரி

தற்போது இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். 

ttn

இந்நிலையில்  நடிகை காயத்ரி அண்மையில் இலங்கை சென்றுள்ளார். அங்கு தனது பணிகளை முடித்து கொண்டு ஆட்டோ ஒன்றில் ஏறி உள்ளார். அப்போது அவருக்கு காத்திருந்தது ஓர் இன்ப அதிர்ச்சி. அதாவது அவர் ஏறிய  ஆட்டோ முழுவதும் தல அஜித்தின் புகைப்படங்கள் ஒட்டியிருந்தன. 

ttn

இலங்கையில் அஜித் ரசிகரா என்ற ஆச்சரியத்தில் மூழ்கி போன காத்திருந்து அதே ஆச்சரியத்துடன் அந்த ஆட்டோவில் இருந்து செல்பி ஒன்றை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.