இறுதி கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ்: அதுக்குள்ள அடுத்த சீசன் அப்டேட் வந்துடுச்சி மக்களே!

 

இறுதி கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ்: அதுக்குள்ள அடுத்த சீசன் அப்டேட் வந்துடுச்சி மக்களே!

பிக் பாஸ் 3 தமிழ் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அடுத்த சீசன் குறித்த தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அடுத்த சீசன் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த மூன்று சீசன் களிலும்  போட்டியாளர்கள் மாறினாலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு இன்னும் கமல் ஹாசனிடமே உள்ளது. ஆரம்பத்தில் கமல் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தி வந்தவுடனே பலருக்கும் ஆச்சரியமும்  எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்குக்  கொஞ்சமும் குறைவில்லாமல் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார் கமல். 

kamal

ஒருகட்டத்தில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதனைத் தனது கருத்துகளைப் பரப்பும் களமாகவே மாற்றிக் கொண்டார் கமல்ஹாசன். பிக் பாஸ் மேடையில் கமல் பேசும் அரசியல்  கருத்துக்கள் ஆதரவும் எதிர்ப்பையும் பெற்றன. இருப்பினும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் கமல். இன்னும் சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய கட்சியையும் அதன் கொள்கைகளையும் பரப்புரை செய்யும் இடமாக மாற்றினார். 

bb

இந்நிலையில் பிக் பாஸ் 4 சீசனிலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருக்கவும், இதன் மூலம் கருத்துக்களை எளிதில் மக்களிடம் சேர்க்க முடிகிறது என்று  நம்பும் கமல் ஹாசன் அடுத்த சீசனில் கலந்துகொள்ளவும் சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.