இருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை!

இருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை!

பொதுவாகவே தென்காசி பகுதியில் உள்ள எல்லா உணவகங்களிலுமே புரோட்டாக்களும் அதற்கு அவர்கள் தரும் சால்னாவும் சிறப்பாக இருக்கும்.
தென்காசி நகரில் அப்படிப்பட்ட பல கடைகள் இருக்கின்றன.அதில் முக்கியமானது ‘கொடிமரம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் பேலி புரோட்டாக்கடை.

food

நாற்பது ஆண்டுகளாக இயங்கும் இந்தக் கடையில் நீண்ட மெனுவெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது.மட்டன் கொத்து,சிக்கன் கொத்து.மட்டன் கிரேவி சிக்கன் கிரேவி,முட்டை அவளவுதான். காலையில் கடைதிறந்தால் 11 மணிவரை வியாபாரம். அப்புறம் மாலை ஆறிலிருந்து இரவு பதினொரு மணிவரை சூடான  வியாபாரம்.இரவில் கோதுமை புரோட்டா கிடைக்கும்.

egg

இந்தப்பகுதியில் புரோட்டா ஆர்டர் செய்தசெய்தால் அவர்களே புரோட்டாவைத் தட்டி பிய்த்துப் போட்டு கொதிக்கும் குருமாவை ஊற்றிக் கொண்டுவந்து வைப்பார்கள். புரோட்டா இரண்டு விதமாகக் கிடைக்கும்,சாஃப்ட்டாக பஞ்சு போல ஒரு ரகமும்,மொறுப்பாக ஒரு ரகமும் கிடைக்கும். கொத்து புரோட்டாவும் இங்கே வெங்காயப் பக்கோடா போல உதிர் உதிராக கிரிஸ்ப்பாக கிடைக்கும்.

பேலி புரோட்டா கடையில் மட்டன் ஆர்டர் செய்யும் போது கிரேவியுடன் வாங்குங்கள்,அதன் சுவை அபாரமாக இருக்கும். கோதுமை புரோட்டாவுக்கு இந்த மட்டன் கிரேவி செம காம்போ.அடுத்தது முட்டை ரகங்கள்,அவித்து குறுக்கே வெட்டி மிளகுத்தூள்,உப்புத் தூவிய சாதாரண முட்டையில் ஆரம்பித்து ஆஃப்பாயில் , ஃபுல்பாயில்,டபுள் பாயில்,கலக்கி,குழம்பு கலக்கி,லைட் ஆம்ளேட்,முக்கால்,டபுள்,நுங்கு,என்று கிட்டத்தட்ட இருபது விதமான ஆம்லெட்டுகள் கிடைக்கும்.

egg

அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களில் பெரும்பாலான கஸ்டமர்கள்,தொடர்ந்து இங்கே சாபிடுபவர்கள்.அவர்களைக் கேட்டால் 40 வருடங்களாக அதே டேஸ்ட் என்று சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் , அதிர்ஷ்டக்கார தென்காசி வாசிகள்.ஆகவே அடுத்த முறை குற்றாலம் போகும்போது தென்காசி, கொடிமரம் பேலி புரோட்டாவை சுவைக்க மறக்காதீர்கள்.