இரானில் ஏற்றப்பட்டு இருக்கும் ரத்தக்கறை படிந்த செங்கொடி… அதன் பின்னணியில் இருக்கும் ரத்த சரித்திரம்..!? 

இரானில் ஏற்றப்பட்டு இருக்கும் ரத்தக்கறை படிந்த செங்கொடி… அதன் பின்னணியில் இருக்கும் ரத்த சரித்திரம்..!? 

இரான் நாட்டிலிருக்கும் கோம் நகர்தான் ஷியா முஸ்லீம்களின் தலைநகர். இந்த நகரில் உள்ள ஜம்காரன் மசூதியின் உச்சியில் ஒரு செங்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. இது ஷியா மதத்தவரின் போர்பிரகடனம்.1500 ஆண்டுகளாகிறது இந்தக் கொடி ஏற்றப்பட்டு. இதன் அர்த்தம் ஜெனரல் காசில் சுலைமானியின் கொலைக்கு அமெரிக்காவை பழிதீர்க்கும் யுத்தம் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

இந்த செங்கொடியின் வரலாறு துயரம் தோய்ந்தது. இது ஷியா முஸ்லீம்களுக்கு ஒரு துயர சம்பவத்தை உணர்த்தும் குறியீடு. இஸ்லாம் மதம் பரவிய காலத்தில் முகமது நபி மறைவுக்குப் பிறகு இஸ்லாத்துக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்தது. இறைத்தூதர் நபியின் உறவினரும், அவரது மகள் ஃபாத்திமாவை மணந்தவருமான அலியின் தலைமை ஏற்றவர்களும், அதை மறுத்தவர்களும் இஸ்லாமிய அகிலத்தின் தலைமைக்காக போரில் இறங்கினார்கள்.

red-flag

1500 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய ஈராக்கில் பல போர்முனைகளில் இந்த போர்கள் நிகழ்ந்தன. இதில் அலியும் அவரது மகன்களும், முகமது நபியின் பேரர்களுமான ஹசனும், ஹுசைனும் கொல்லப்பட்டனர். ஆனாலும் கர்பாலா நகரில் நடந்த இந்தப் படுகொலைகளுக்கு பழிதீர்க்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட போர் நான்கு ஆண்டுகள் நடந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த பெரும் ரத்தக்களறி இதுதான். இந்த உக்கிரமான போரில் அலி மற்றும் மக்கள் ஹசன், ஹுசைன் ஆகியோரின் மரணத்திற்கு வஞ்சம் தீர்க்க போரிட்ட இஸ்லாமிய மக்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் ஷியாக்கள் என்ற பிரிவினர் ஆனார்கள். அவர்கள் போரில் பழிக்குப் பழி வாங்கியதுடன் இரானில் ஒரு சுதந்திர நாட்டை அமைத்து தங்களது தனித்தன்மையை உறுதிசெய்து கொண்டார்கள். இந்த வரலாறின் தொடர்ச்சியாகத்தான் இரான் இன்னமும் ஷியாக்களின் தாயமாக சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறது.

1500 ஆண்டுகளுக்கு முன் அலி கொல்லப்பட்ட பிறகு, கர்பாலா நகரில் போரில் இறந்த தியாகிகளின் ரத்தத்தில் தோய்ந்த இந்தக் கொடியை அலியின் மகன் ஹுசைன் முதன் முறையாக ஏற்றினார். அந்த ரத்த நிற கொடி தந்த உத்வேகத்தில்தான் ஷியாக்கள் போரை வென்றனர். இந்த வரலாற்று புகழ் பெற்ற சம்பவத்துக்கு பிறகு, 1500 வருடங்கள் கழிந்தபின் இப்போதுதான், இந்த ரத்தக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. இது எதிர்காலத்தில் நடக்கப்போகும் பல உக்கிரமான போர்களுக்கு இதுதான் ஆரம்பமாக இருக்கப்போகிறது.