இரவு நேரத்தில் களைப்புடன் வண்டி ஓட்டுபவர்களுக்கு ‘டீ’ கொடுத்து அசத்தும் போலீஸ் !

 

இரவு நேரத்தில் களைப்புடன் வண்டி ஓட்டுபவர்களுக்கு ‘டீ’ கொடுத்து அசத்தும் போலீஸ் !

விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் அரியலூர் காவல் துறையினர் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். 

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வாகனங்களும் அதிகரித்துக் கொண்ட வருகின்றன. வாகனங்கள் அதிகரிப்பால் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமான அளவில் ஏற்படுகின்றன. பெருமளவான விபத்துகள் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதாலும், தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டுவதாலும் நிகழ்கின்றன. விபத்துக்களைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்கள் என்ன தான் நடவடிக்கை எடுத்து வந்தாலும் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க முடியவில்லை. இந்த விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் அரியலூர் காவல் துறையினர் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். 

tea

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் டி.எஸ்.பி மோகன்தாஸ் தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. அதில் காவலர்கள் இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு விபத்து குறித்து எடுத்துரைக்கின்றனர்.

tea

அதுமட்டுமின்றி, அவர்களை முகம் கழுவச் சொல்லி தேநீர் வழங்குகின்றனர். அதன் பின்னர், அவர்களைச் சிறிது நேரம் களைப்பாறச் சொல்லிவிட்டு பின்னர் வாகனங்களை ஓட்டிச் செல்ல அனுமதிக்கின்றனர். காவலர்களின் இந்த புதிய முயற்சி வாகன ஓட்டிகளிடையேயும் பொது மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.