இரண்டே நாளில் ரூ.294 கோடி… கொள்ளை லாபம் கொடுத்த மதுக்கடைகள் மூடல்! – திண்டாடும் தமிழக அரசு

 

இரண்டே நாளில் ரூ.294 கோடி… கொள்ளை லாபம் கொடுத்த மதுக்கடைகள் மூடல்! – திண்டாடும் தமிழக அரசு

தமிழகத்தில் இரண்டு நாட்கள் செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு 294 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. உயர் நீதிமன்ற தடை காரணமாக வருவாய் தடைபட்டுள்ளதால் தமிழக அரசு திண்டாடி வருகிறது.

தமிழகத்தில் இரண்டு நாட்கள் செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு 294 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. உயர் நீதிமன்ற தடை காரணமாக வருவாய் தடைபட்டுள்ளதால் தமிழக அரசு திண்டாடி வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு முடியாத நிலையில், மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளே 170 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. இரண்டாம் நாளும் நூறு கோடியைத் தாண்டி விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. தமிழக அரசின் இந்த விற்பனைக்கு பேரிடியாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்காத நிலையில் ஊரடங்கு முடியும் வரை ஆன்லைனில் விற்பனை செய்வது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்று கூறியது உயர் நீதிமன்றம்.

chennai-high-court.jpg

தினமும் 100 கோடியைக் கொட்டும் டாஸ்மாக்கை மூட தமிழக அரசுக்கு விருப்பமில்லை. இதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.மாநிலத்திலேயே மதுரையில் அதிக விற்பனை நடந்துள்ளது. சென்னை நகரிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டிருந்தால் வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.
டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடைகளை பூட்டியதோடு இல்லாமல், சீல் வைத்துள்ளனர். இதனால், பூட்டு திறந்து ரகசியமாக விற்பனை செய்ய முடியாது. மேலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த, சட்டவிரோத மது விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. 

tasmac-opens-tn

இதற்கிடையே தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு டாஸ்மாக் கடத்தப்பட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வழக்கமாக புதுச்சேரி மது வகைகள்தான் தமிழகத்துக்கு கடத்தப்பட்டு வந்தன. புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மது கடத்தப்பட்டுள்ளது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.