இரண்டு வயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தம்பதி: கலங்க வைக்கும் பின்னணி!?

 

இரண்டு வயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தம்பதி: கலங்க வைக்கும் பின்னணி!?

கடன் தொல்லை காரணமாக ஏரியில் மூழ்கி பலியான தம்பதிகள் உடல் மீட்கப்பட்ட நிலையில் அவர்களது இரண்டு வயது குழந்தையை தேடும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஓசூர் : கடன் தொல்லை காரணமாக ஏரியில் மூழ்கி பலியான தம்பதி உடல் மீட்கப்பட்ட நிலையில் அவர்களது இரண்டு வயது குழந்தையை தேடும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

suicide

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்  கண்ணன். இவருக்கு  கல்பனா என்ற மனைவியும்,  கபிலன் என்ற  2 வயது மகனும் உள்ளனர்.   பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்த கண்ணனுக்கு கேரளாவுக்கு  பணி இடமாறுதல் கிடைத்துள்ளது. 

hosur

இந்நிலையில்  நேற்று முன்தினம் குழந்தையுடன் கண்ணன் – கல்பனா   தம்பதியினர் ஓசூர் தர்கா சந்திராம்பிகை ஏரியில் குதித்து  தற்கொலை செய்து கொண்டனர்.  இருவரின் சடலங்களும் ஏரியில் மிதக்க, இதைக்கண்ட அப்பகுதி வாசிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏரியின் அருகில்  இரண்டு வயது குழந்தை  கபிலனின் காலணி மற்றும் கண்ணனின் மோட்டார் சைக்கிள் ஏரிக்கரை  அருகில் நின்றிருந்தது. இதனால் குழந்தையும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் குழந்தையின் உடலை தேடும் பணி   நடந்தது. இருப்பினும் இன்றுவரை குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையை வேறு எங்கேனும் கொண்டு சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

கடன் தொல்லை காரணமாக அவர்கள்  தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரேத பரிசோதனை முடிந்து கண்ணன் மற்றும் கல்பனா உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.