இரண்டு மடங்கு சம்பளம்… பல போனஸ்! – இன்ஃபோசிஸின் பலே திட்டம்

இரண்டு மடங்கு சம்பளம்… பல போனஸ்! – இன்ஃபோசிஸின் பலே திட்டம்

நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது, லட்சக் கணக்கான ஐ.டி பணியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர் என்று செய்தி வெளியாகி வரும் வேளையில், குறிப்பிட்ட திறன் உள்ளவர்களுக்கு இரு மடங்கு அதிக சம்பளம், பல போனஸ் வழங்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இன்ஃபோசிஸ் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு ஃபிரஷ்ர் மாணவர்களை எடுக்கிறது. தற்போது, பவர் ப்ரோகிராம் என்ற பெயரில் 500 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. பயிற்சிக்குப் பிறகு இவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு இரண்டு மடங்கு வரை சம்பளத்தை உயர்த்தித் தரவும், ஓராண்டுக்கு பல போனஸ் வழங்கவும் இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. 

infosys

இந்த பவர் ப்ரோகிராமில் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி தற்போது இன்ஃபோசிஸில் பணியாற்றும் பணியாளர்களும் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் இன்டேர்னல் கோடிங் டெஸ்ட் அல்லது ஹேக்கத்தான் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். 
ஒருவர் பவர் ப்ரோகிராமர் ஆகிவிட்டால் அவருடைய சம்பளம் இரண்டு மடங்காகிவிடும், ஒவ்வொரு ஆண்டும் அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று இன்ஃபோசிஸ் துணைத் தலைவரும் எச்.ஆர் பிரிவு தலைவருமான கிரிஷ் சங்கர் தெரிவித்துள்ளார். 
இன்ஃபோசிஸ் போலவே டி.சி.எஸ்-ம் நேஷனல் குவாலிஃபையர் டெஸ்ட் என்ற ஒன்றை அறிவித்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் தொடக்க நிலையிலேயே இரு மடங்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.