இரண்டு நிமிடத்தில் இத்தனை சர்ச்சை வசனங்களா… சென்சாரில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட ஜிப்ஸி படக்குழு!

இரண்டு நிமிடத்தில் இத்தனை சர்ச்சை வசனங்களா… சென்சாரில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட ஜிப்ஸி படக்குழு!

ஜிப்ஸி படக்குழு சென்சாரில் நீக்கப்பட்ட படத்தின் காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள். வீடியோ தொடங்கும் போதே “இந்த காட்சியின் வசனங்கள் சர்சைக்குரியவை என சென்சார் அதிகாரிகளால் மறுக்கப்பட்டவை, எனவே இந்த காட்சி திரைப்படத்தில் இடம்பெறாது” என்று தெரிவித்திருந்தார்கள். 

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கும் படம் ‘ஜிப்ஸி’. இந்த படம் போன வருடமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இத்தனை நாட்கள் படம் வெளியாவதில் இழுபறி நிலவி வந்தது. படத்தில் பல காட்சிகள் சென்சாரில் நீக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது இப்படம் கம்யூனிசம் பற்றி பேசப்போகிறதாகத் தெரிந்தது. மற்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டில் திரைத்துறையில் கருத்துசுதந்திரம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். 

gypsy-movie-09

ஜிப்ஸி படக்குழு சென்சாரில் நீக்கப்பட்ட படத்தின் காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள். வீடியோ தொடங்கும் போதே “இந்த காட்சியின் வசனங்கள் சர்சைக்குரியவை என சென்சார் அதிகாரிகளால் மறுக்கப்பட்டவை, எனவே இந்த காட்சி திரைப்படத்தில் இடம்பெறாது” என்று தெரிவித்திருந்தார்கள். 

gypsy

இந்த இரண்டு நிமிட காட்சியில், நாடோடிகளாகத் திரியும் சிலரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருக்கிறார்கள். அங்கு நடக்கும் விவாதத்தில் இடம்பெறும் வசனங்கள் அனைத்தும் சர்ச்சைகுரியவை தான். நிஜ வாழ்க்கையின் நிலையை எடுத்துச் சொல்வதும் சர்ச்சையில் அடங்கும் போல. ராமர் வேடமிட்ட ஒருவர் நாகூர் ஆண்டவரே என்பது, இரண்டு கால் இல்லாதவரை தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கவில்லை என பிடித்து வைத்திருப்பது, துப்பாக்கிசூடு பற்றி சொல்வது என ஒவ்வொரு காட்சியிலும் ஜனநாயகத்தின் மீது கல் எறிகிறார் இயக்குனர். பொறுத்திருந்து பார்ப்போம் ஜிப்ஸியின் பயணத்தை…