இரண்டு கட்டமாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்புகள் !

 

இரண்டு கட்டமாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்புகள் !

3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக வரும் 27 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் குறித்த முழு வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, மனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பழனிசாமி தெரிவித்தார். 

ttn

அவர் கூறியதன் படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ஆம் தேதி நடைபெறும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 13ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கான வேட்புமனு பரிசீலனை வரும் 16ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

ttn

அதனைத் தொடர்ந்து, 18 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திரும்பப்பெற்றுக் கொள்ளலாம், இரண்டு கட்டமாக நடக்கும் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு 27 டிசம்பர் நடைபெறும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு  டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

ttn

இதனையடுத்து, வாக்குப்பதிவு நடக்கும் இரண்டு நாட்களும் காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும். இதில், கிராம உள்ளாட்சித் தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஜனவரி 6 ஆம் தேதி பதவியேற்பார்கள். தமிழக அரசு மறைமுகமாக நடத்தவிருக்கும் மேயர் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். 

ttn

மேலும், 27 ஆம் தேதியன்று முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகளிலும், 30 ஆம் தேதியன்று இரண்டாம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் நடைபெறும் என்றும் நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் நகர்ப்புறங்களின் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார். 

ttn