இரண்டாவது ஓருநாள் போட்டி: நாக்புரில் நல்ல நாள் யாருக்கு? 

 

இரண்டாவது ஓருநாள் போட்டி: நாக்புரில் நல்ல நாள் யாருக்கு? 

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் ஒருநாள் போட்டியில், மந்தமான ஆடுகளத்தில் தொண்ணூறுகளின் பணியில் ஓரு துரத்தலை செய்து முடித்தது இந்தியா. இந்நிலையில் இரண்டாவது போட்டி, நாக்பூரில் நடைபெறுகிறது

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் ஒருநாள் போட்டியில், மந்தமான ஒரு ஆடுகளத்தில் தொண்ணூறுகளின் பணியில் ஓரு துரத்தலை செய்து முடித்தது இந்தியா. இந்நிலையில் இரண்டாவது போட்டி, நாக்பூரில் நடைபெறுகிறது

உலக கோப்பைக்கான முன் தயாரிப்பில் முனைப்பு காட்டி வரும் இந்திய அணிக்கு, கடந்ந ஆட்டத்தில் ஏற்பட்ட “23 ஓவர்களில் 99/4 ” என்பது கூட (மீண்டு வர முயல) ஒரு நல்ல நிலையாக தான் இருந்ததாக கோலி தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, கடந்த ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் 38 ரன்களே எடுத்ததும், க்வாஜா, ஹான்டஸ்கோம்ப், ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஸ்ட்ரைக் விகிதம் 70-க்கு மேல் போகாததும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். இந்திய பந்துவீச்சில் நடுப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியதும், அதில் ஜடேஜா, ஜாதவ் பங்களிப்பு மிகச்சிறப்பாக அமைந்ததும், அதற்கு முன் வேகப்பந்து வீச்சாளர்கள் கொடுத்திருந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கின.

ஆஸ்திரேலிய வீரர்களில் குல்டர் நைல் ,ஒரு பந்துவீச்சாளராக மட்டுமன்றி ,கடைநிலை வீரராக அதிரடி பேட்டிங் செய்ய கைவரப் பெற்றவராக திகழ்வது அந்த அணிக்கு பலம். இதுவே அவரை உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற செய்துவிடும்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு.
ஆஸ்திரேலிய அணிக்கு ஷான் மார்ஷ் திரும்புவதற்கு ஏதுவாக, ஆஷ்டன் டர்னர் வழி விடக்கூடும். அப்படி நிகழ்ந்தால், நடு வரிசை வீரர்கள் வழக்கமான இடத்தை விட ஒரு படி கீழிறங்கி வரக்கூடும்.

நாக்பூரின் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 2009: 99 ரன்கள் வித்தியாசத்தில் 
,2013 : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 351 ரன்களை துரத்தி.. 2017 : 7 விக்கெட் வித்தியாசத்தில்.

இருபது ஓவர் தொடரை இழந்தாலும், முதல் ஒருநாள் போட்டியில் வென்ற உத்வேகத்தில் இந்தியா. வீழ்ச்சியடைந்து மீண்டு வர முயலும் முனைப்பில் ஆஸ்திரேலியா.

நாக்பூரில் நல்ல நாள் யாருக்கு? காலம் பதில் சொல்லும்.