இரட்டை இலை சின்னம் யாருக்கு?: நேரடியாக மோதும் அதிமுக vs டிடிவி தினகரன்

 

இரட்டை இலை சின்னம் யாருக்கு?: நேரடியாக மோதும் அதிமுக vs  டிடிவி  தினகரன்

அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் இன்று தனது  தீர்ப்பை வழங்குகிறது.

புதுதில்லி: அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் இன்று தனது  தீர்ப்பை வழங்குகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தன. இதையடுத்து சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில்  பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்ததையடுத்து தாங்களே உண்மையான அதிமுக என்று கூறினார்.

admk symbol

இதனையடுத்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் இருதரப்பு வாதமும் முடிவடைந்ததாகக் கூறிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் கடந்த 8ம் தேதி ஒத்தி வைத்தனர்.

delhi hc ttn

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகல் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் அதிமுகவினரும், அமமுகவினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.