இரக்கப்பட்டு வாங்கிய மனைவி.. ‘கம்முன்னு’ இருந்த கணவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

 

இரக்கப்பட்டு வாங்கிய மனைவி.. ‘கம்முன்னு’ இருந்த கணவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

பாவமாக இருக்கு என்று கூறி லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். சரி மனைவி ஆசைப்படுகிறாள் என்று நினைத்து சிவனும் எதுவும் கூறவில்லை.

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவருக்கு லாட்டரிக்கு ரூ 70 லட்சம் பரிசு  விழுந்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையைச் சேர்ந்தவர் சிவன்.  இவருக்கு ஓமணா  என்ற மனைவி உள்ளார். ஓமணாவும்  சிவனும் சமீபத்தில் அங்குள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது கோயில் அருகில் ஒருவர் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்தார். அவர் ஓமணாவிடம் அம்மா நான் இதயநோயாளி, நீங்கள் இந்த லாட்டரி சீட்டை வாங்கிக்கொண்டால் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால்  சிவனுக்கு இதில் விருப்பம் இல்லாததால் அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். அப்போது அவரது  மனைவி அவரிடம், பார்க்க பாவமாக இருக்கு என்று கூறி லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். சரி மனைவி ஆசைப்படுகிறாள் என்று நினைத்து சிவனும் எதுவும் கூறவில்லை.

ttn

இந்நிலையில் ஓமணா இரக்கப்பட்டு வாங்கிய அந்த லாட்டரிக்கு ரூ 70 லட்சம் பரிசு  விழுந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள சிவன், ‘நான் ஏழை கட்டிட தொழிலாளி. என் மனைவி விரும்பியதால் தான் லாட்டரி சீட்டு வாங்கினாள். தற்போது அதற்கு ரூ 70 லட்சம் பரிசு  விழுந்துள்ளது. எனக்கு பணத்தை வீண் செலவு செய்தால்  பிடிக்காது. தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள பணத்தில் வீட்டை பெரிதாக கட்டி கொள்ளவுள்ளேன். மேலும் கடன்களை அடைக்கவுள்ளேன்’ என்றார்.