இயக்குநர் வேலுபிரபாகரனா இப்படி செய்தார்? ஆச்சர்யத்தில் திரையுலகம்

 

இயக்குநர் வேலுபிரபாகரனா இப்படி செய்தார்? ஆச்சர்யத்தில் திரையுலகம்

கோலிவுட் இயக்குநர் வேலு பிரபாகரன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற வீடியோ வைரலாகிவருகிறது. 

கோலிவுட் இயக்குநர் வேலு பிரபாகரன் தீவிர நாத்திகர். பெரியார் தொண்டர். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர். திரையுலகில் ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ படங்களில் நாத்திக கொள்கைகளையும், ஜாதி, மத எதிர்ப்புக் கொள்கைளையும் பறை சாற்றியவர். அவர் இன்று திருச்செந்தூர் கோயிலில் வழிபாடு செய்த வீடியோ திரையுலகினரை மட்டுமல்லாது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.