இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இவருடன் தான்: ரசிகர்கள் உற்சாகம்!?

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இவருடன் தான்: ரசிகர்கள் உற்சாகம்!?

விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ்  ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார்.

‘தளபதி 64′ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

lokesh

‘மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் வெளியாகி விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ்  ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார்.

Kathie

இப்படத்தில்   விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

kamal

இந்நிலையில் இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.