இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் விலகல்! ஏன் தெரியுமா?

 

இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் விலகல்! ஏன் தெரியுமா?

இயக்குநர் சங்க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: இயக்குநர் சங்க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராகச் சமீபத்தில்  இயக்குநர் பாரதிராஜாவைச் சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். தலைவராக பதவி வகித்து வந்த இவர், தற்போது திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆகும் நிலையில் பாரதிராஜாவின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில் நமது சங்க நிர்வாகிகள், இயக்குநர்கள், இணை-துணை இயக்குநர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். 

barathiraja

ஆகையால் ஜனநயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குநராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டலும் பேரன்பும் என்றும் தொடரும்’ என்று கூறியுள்ளார். மேலும் இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு ஜூலை 14-ம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.