இயக்குநரை முதலில் மரியாதையா பேசுங்க: வடிவேலு பேச்சு குறித்து இயக்குநர் சுசீந்திரன் காட்டம்!

இயக்குநரை முதலில் மரியாதையா பேசுங்க: வடிவேலு பேச்சு குறித்து இயக்குநர் சுசீந்திரன் காட்டம்!

பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த காண்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் உலக அளவில் ட்ரெண்டானது. இதையடுத்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்த வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தைக் குறித்து இயக்குநர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் குறித்து ஒருமையில் பேசியிருந்தார். 

அவரின் அந்த பேச்சு திரைத்துறையினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் சமுத்திரக்கனி, நவீன்,விஜய்மில்டன் என்று இன்னும் பல இயக்குநர்கள் வடிவேலு மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் இயக்குநர் சுசீந்திரனும் வடிவேலுவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘வடிவேலு அவர்கள், 23-ம் புலிகேசி பட இயக்குநர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் பற்றி பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சிம்புதேவன் 23-ம் புலிகேசி மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

s

தன் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைத் தந்தார். அதன் பிறகு பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார். ஒரு இயக்குநரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை. புலிகேசி-க்கு பிறகு வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களின் ரிசல்ட் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குநர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.