இயக்குநராகிறார் விஷால்!

 

இயக்குநராகிறார் விஷால்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் ஏரளாமான நடிகர்கள் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வமாக உள்ளனர். கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை முன்னணி நடிகர்கள் பலரும் திரைப்பட இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், உதவி இயக்குநராக தனது திரை பயணத்தை துவக்கிய நடிகர் விஷால் தற்போது முழுநேரமாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

’செல்லமே’ திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன் நடிகரும், இயக்குநருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக விஷால் பணியாற்றியுள்ளார். தற்போது விலங்குகள் குறித்த திரைப்படம் ஒன்றை இயக்க நடிகர் விஷால் தயாராகி வருகிறார்.

நாய் மற்றும் பூனையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் விஷால் தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விலங்குகள் ஆர்வலரான நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.