இமான் அடுத்த படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு பார்சல் ! வைரல் சிறுவன் பாடும் அடுத்த ஹிட் பாடல்

 

இமான் அடுத்த படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு பார்சல் ! வைரல் சிறுவன் பாடும் அடுத்த ஹிட் பாடல்

இப்போதெல்லாம் டிக்டாக்கில் பிரபலம் ஆக வேண்டுமென்றால் குழந்தைகள் தான் சிறந்த வழி என்று நினைக்கும் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். விளையாட வேண்டிய வயதில் விளையாட விடாமல் ‘எங்களை பேமஸ் ஆக்கு’ என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை டார்ச்சர் செய்கிறார்கள்

இப்போதெல்லாம் டிக்டாக்கில் பிரபலம் ஆக வேண்டுமென்றால் குழந்தைகள் தான் சிறந்த வழி என்று நினைக்கும் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். விளையாட வேண்டிய வயதில் விளையாட விடாமல் ‘எங்களை பேமஸ் ஆக்கு’ என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை டார்ச்சர் செய்கிறார்கள். இருந்தாலும் சில குழந்தைகள் உண்மையாகவே சில திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். அவர்களின் திறமைகளை உலகிற்கு எடுத்துச் செல்ல சமூக வலைத்தளங்கள் உதவி வருகின்றன என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

நேற்று முதல் அனைத்து சமூக வலைதளங்களிலும் ஒரு சிறுவன் பள்ளியில் வைத்து பாடும் வீடியோ தான் பரவி வருகிறது. “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை” என்ற பாடலில் உலக கருத்துக்கள் அனைத்தையும் ஒரே பாடலில் அடங்கியிருப்பார்கள். சந்திரபாபுவின் அந்த புகழ் பெற்ற தத்துவப் பாடலை பள்ளி சிறுவன் அவர் போலவே மிக அழகாக பாடும் வீடியோ வைரலாகியது.

இப்போது அதே சிறுவன் விசுவாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலைப் பாடும் வீடியோ வெளிவந்துள்ளது. இந்த விடியோவும் வைரலானால் தம்பியை அடுத்து சூப்பர் சிங்கரில் பார்க்கும் வாய்ப்புக்கு அமோகம். இமான் அடுத்த படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு பார்சல்….