இமாச்சலத்தில் இரண்டு நாள் -பனிப்பொழிவும் ,மழைப்பொழிவும்-ஆரஞ்சு அலெர்ட் …  

 

இமாச்சலத்தில் இரண்டு நாள் -பனிப்பொழிவும் ,மழைப்பொழிவும்-ஆரஞ்சு அலெர்ட் …  

இமாச்சலத்தில் உள்ள  சிம்லா வானிலை மையம் அங்கு  கடும் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட இருப்பதாக  எச்சரிக்கை விடுத்துள்ளது .  
வெள்ளிக்கிழமை ரோஹ்தாங் உள்ளிட்ட உயரமான சிகரங்களில் பனிப்பொழிவு ஏற்பட இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், சிம்லாவில் வானிலை மோசமாக இருக்குமென்றும் அதனால் மாநிலத்தில்  இரண்டு நாள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Shimla Weather

இது தவிர, உனா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், மண்டி, சிம்லா, சோலன் மற்றும் சிர்மவுர் மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வானிலை  பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மறுபுறம்,சம்பா,காங்க்ரா,குலு மற்றும் மண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை கடுமையான மழை மற்றும் பனி பற்றிய ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தவிர,மார்ச் 1 வரை மாநிலத்தில் வானிலை மோசமாக இருக்குமென்றும்  மார்ச் 2 முதல் வானிலை தெளிவாக இருக்குமென்றும்.இதன் பின்னர், மார்ச் 3 முதல் 5 வரை சில பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுமென்றும் அது கூறியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை உனாவில் 26.0 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, மேலும் பிலாஸ்பூரில் 22.5, காங்க்ராவில் 22.4, ஹமீர்பூரில் 22.0, சுந்தர்நகரில் 21.8, சம்பாவில் 21.5, சோலனில் 20.0, நஹானில் 18.7, பூந்தரில் 18.5, தர்மசாலாவில் 16.2, சிம்லாவில் 14.6, கல்பாவில் 10.4. , டல்ஹெளசி 9.4 மற்றும் கீலாங் 5.0 டிகிரி செல்சியஸ்சாக  பதிவு செய்தது.