இப்ப நம்புறீங்களா இது மக்களாட்சி தான் – பிரதமர் மோடி பெருமிதம்

 

இப்ப நம்புறீங்களா இது மக்களாட்சி தான் – பிரதமர் மோடி பெருமிதம்

அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அயோத்தி வழக்கில், ராமர் கோயில் கட்டலாம் என்றும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தியிலேயே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது. 

AyodhyaJudgment

இந்நிலையில் நாட்டுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்; நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பு மூலம் நீதி, நியாயம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.  நாட்டில் வேற்றுமை, எதிர்மறை எண்ணங்கள் மறைந்த தினம் இன்று  உலகிலேயே இந்தியா தான் நீதியை நிலைநாட்டும் நாடாக திகழ்கிறது.

Supremecourt  

தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை . நமது ஜனநாயகம் எவ்வளவு பல பொருந்தியது என்று உலகமே கண்டுள்ளது. நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய பாதை உருவாகியுள்ளது. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது” என பேசினார்.