இப்ப சோஷியல் மீடியா ரொம்ப முக்கியமா? கொரோனா நடவடிக்கைய எடுங்க மோடிஜீ! ராகுல் காந்தி அட்வைஸ் 

 

இப்ப சோஷியல் மீடியா ரொம்ப முக்கியமா? கொரோனா நடவடிக்கைய எடுங்க மோடிஜீ! ராகுல் காந்தி அட்வைஸ் 

மார்ச் 2ம் தேதி இரவு திடீரென்று சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற யோசித்துவருவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்தார். இதனால் பா.ஜ.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். வெளியேற வேண்டாம் என்று சமூக ஊடகங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு செய்தனர்.

மார்ச் 2ம் தேதி இரவு திடீரென்று சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற யோசித்துவருவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்தார். இதனால் பா.ஜ.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். வெளியேற வேண்டாம் என்று சமூக ஊடகங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். நோ சார் என்ற ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனது. சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற வேண்டாம், தப்பான எண்ணத்தைத் தூண்டும் வகையில் பதிவிடுவதை நிறுத்தினாலே போதும் என்று பலரும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இன்று, மகளிர் தினத்தன்று மற்றவர்களுக்கு உந்து சக்தியாக வாழும் பெண்களுக்காக என்னுடைய சமூக ஊடக பக்கங்களை விட்டுக்கொடுக்கிறேன் என மோடி ட்வீட் செய்தார்.

 

 

இந்நிலையில் மோடியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவரது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும்; சமூக வலைதளங்களில் நேரம் விரயம் செய்ய வேண்டாம்” எனக்கூறி கொரோனா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.