இப்பம்தான் வெங்காயம் மேட்டர் முடிந்தது…. அடுத்து ஆட்டத்தை தொடங்கிய தக்காளி

 

இப்பம்தான் வெங்காயம் மேட்டர் முடிந்தது…. அடுத்து ஆட்டத்தை தொடங்கிய தக்காளி

தலைநகர் டெல்லியில் தக்காளி விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. அடுத்தடுத்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் மத்திய அரசு திகைத்து நிற்கிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற வெங்காயம் சாகுபடி அதிகம் நடைபெறும் மாநிலங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்தது. இதனால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், சப்ளையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இதனால் வெங்காய விலையை குறைக்க கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சந்தையில் விற்க தொடங்கியது மத்திய அரசு. மேலும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை, வர்த்தகர்கள் கையிருப்புக்கு உச்சவரம்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறைய தொடங்கியுள்ளது.

வெங்காயம்

இந்நிலையில் தக்காளி விலை மளமளவென உயரத் தொடங்கியுள்ளது. தெலங்கானா, கர்நாடகாக உள்ளிட்ட தென்மாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தது. இதன் உற்பத்தி குறைந்தது அதன் தாக்கல் சப்ளையில் எதிரொலித்தது. சப்ளை குறைந்ததால் தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனையானது. கொல்கத்தா (கிலோ ரூ.60), மும்பை (ரூ.54) மற்றும் சென்னை (ரூ.40) ஆகிய நகரங்களிலும் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

தக்காளி

வெங்காயம், தக்காளி போன்றவை அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகள். அவற்றின் விலை உயர்ந்தால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். அதனால் அவற்றின் விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தும். தற்போதுதான் கஷ்டப்பட்டு வெங்காய விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலை உயர்ந்து வருவது மத்திய அரசு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.