இப்படி பார்த்தால் குறைஞ்சு இருக்கு…. அப்படி பார்த்தால் அதிகம்தான்…… மொத்தத்தில் வட்டி குறைப்புக்கு பாதகமாக நிற்கும் சில்லரை விலை பணவீக்கம்…..

 

இப்படி பார்த்தால் குறைஞ்சு இருக்கு…. அப்படி பார்த்தால் அதிகம்தான்…… மொத்தத்தில் வட்டி குறைப்புக்கு பாதகமாக நிற்கும் சில்லரை விலை பணவீக்கம்…..

கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய ஜனவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அதேசமயம் 2019 பிப்ரவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 2.57 சதவீதமாக குறைந்து இருந்தது.

கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்தது. 2020 ஜனவரி மாதத்தில் சில்லரைவிலை பணவீக்கம் 68 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.59 சதவீதமாக உயர்ந்தது. ரிசர்வ் நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டை இலக்கை காட்டிலும் சில்லரைவிலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ரிசர்வ் வங்கி கடந்த 2 நிதிக்கொள்கை ஆய்வு கூட்டங்களின் போது கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. கடந்த மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு பொருட்களின் விலை மிதமான அளவில் இருந்ததே இதற்கு முக்கிய காரணம். முந்தைய ஜனவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அதேசமயம் 2019 பிப்ரவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 2.57 சதவீதமாக குறைந்து இருந்தது.

வட்டி குறைப்பு

பணவீக்கம் சென்ற மாதம் குறைந்துள்ளபோதிலும், அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கான 4 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். அதனால் ரிசர்வ் வங்கி அடுத்து வரும் தனது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை குறைக்குமா என்பது சந்தேகம்தான். இருப்பினும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடனுக்கான வட்டியை குறைக்கவும வாய்ப்புள்ளது.