இப்படியும் ஆசிரியர்களுண்டா?! வியக்கவைக்கும் ஆசிரியரின் கற்பிக்கும் முறை!

 

இப்படியும் ஆசிரியர்களுண்டா?! வியக்கவைக்கும் ஆசிரியரின் கற்பிக்கும் முறை!

சமீப காலமாக குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஜாலியாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பற்றிய வீடியோக்களை அடிக்கடி பார்க்கிறோம். அந்த வரிசையில் 
விர்ஜினியாவை சேர்ந்த கல்லூரி பேராசியர் ஒருவர் பாடம் நடத்தும் வீடியோ வைரலாகிவருகிறது. 

சமீப காலமாக குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஜாலியாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பற்றிய வீடியோக்களை அடிக்கடி பார்க்கிறோம். அந்த வரிசையில் 
விர்ஜினியாவை சேர்ந்த கல்லூரி பேராசியர் ஒருவர் பாடம் நடத்தும் வீடியோ வைரலாகிவருகிறது. 

physics professor

விர்ஜின் பீச்சில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியில் பணிபுரிவர் 69 வயதான டேவிட் வ்ரைட். முனைவர் பட்டம் பெற்றுள்ள டேவிட், கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்ரிவருகிறார். மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்துகொள்ளும் விதத்தில் பாடம் நடத்துவார். திரவ நைட்ரோஜனை வைத்து ஐஸ் கிரீம் செய்வதும், நெருப்பினை வரவழைப்பதும், வகுப்பறையில் பலூன்களை பறக்கவிடுவது போன்று செய்முறை அறிவியலை மிகவும் ஜாலியாக கற்றுக்கொடுக்கிறார் டேவிட். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களையும், ஆசிரியரின் வித்தியாசமான அணுகுமுறைகளையும்,  எரிகா சர்ச் என்ற மாணவி வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இதுகுறித்து தனியார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டேவிட், “நான் எனது பட்ட படிப்பை முடித்தவுடன் பணியாற்றிய முதல் வேலை பேராசிரியர் பணி. எனது முழு வாழ்க்கையையும் கல்லூரியிலேயே செலவு செய்வேன். இந்த வேலையை நான் ரசித்து செய்கிறேன். இப்படி வித்தியாசமாக கற்பிப்பதால் மாணவர்கள் பாடத்தை கூர்ந்து கவனிப்பர். நான் மாணவர்களுக்கு இயற்பியலை எப்படி நிஜ உலகில் செயல்படுகிறதென்பதை கற்றுத்தருகிறேன்” என தெரிவித்தார். 

physics professor

இதுகுறித்து  மாணவி எரிகா சர்ச் கூறுகையில், ”ஆரம்பத்தில் டேவிட் சார் வகுப்பிற்கு செல்ல பிடிக்கவில்லை. அவர் ஒருமுறை உடைந்த கண்ணாடி படுக்கையின் மீது நடந்து சென்று அதனை அறிவியலோடு ஒப்பிட்டு பாடம் எடுத்ததை பார்க்கும்போது முட்டால் தனமாக இருந்தது. அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியரையும், அவரின் அணுகுமுறையையும் விரும்ப ஆரம்பித்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.