இன்று மாலையுடன் முடிகிறது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் !

 

இன்று மாலையுடன் முடிகிறது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் !

158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்கு பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கும் மேலாக சில பகுதிகளில் நடைபெற்றது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று 156 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 

ttn

இந்நிலையில்,  158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்கு பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. தேர்தலுக்கு ஒரு நாள் முன்னரே வழக்கமாகத் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடையும். அதன் படி, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. அதனால், தூத்துக்குடி, தேனி,கடலூர்:நாகை,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.