இன்று சங்கடஹர சதுர்த்தி.சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு | சனி திசை நடப்பவர்கள் பயன்படுத்திக்கோங்க!

 

இன்று சங்கடஹர சதுர்த்தி.சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு | சனி திசை நடப்பவர்கள் பயன்படுத்திக்கோங்க!

விநாயகரை வழிபட எல்லா நாளும் உகந்த நாளே. இருப்பினும் ஒவ்வொரு பௌர்ணமி அடுத்து வரும் நாலாம் நாளாக வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நம் வாழ்வின் எல்லா துயரங்களை நீக்கும் வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. ஹர என்னும் சொல்லுக்கு  அழித்தல் என்று பொருள்

vinayagar

விநாயகரை வழிபட எல்லா நாளும் உகந்த நாளே. இருப்பினும் ஒவ்வொரு பௌர்ணமி அடுத்து வரும் நாலாம் நாளாக வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நம் வாழ்வின் எல்லா துயரங்களை நீக்கும் வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. ஹர என்னும் சொல்லுக்கு  அழித்தல் என்று பொருள். நம் வாழ்க்கையின் சங்கடங்களை அழிக்கும் எனப் பொருள் கொள்ளப்படும். இன்று மாலை குளித்து முடித்து, விநாயகர் நினைவோடு விரதத்தை துவங்கி, அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று விநாயகரிடம்  நம் வேண்டுதல்கள் நிறைவேற கோரிக்கை வைத்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். 
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
என்று விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி ஆலயத்தை 8 முறை வலம் வர வேண்டும். விநாயகர் அகவலும் படித்தாலும் உடனடி பலன் நிச்சயம். மாலை கோவிலுக்கு செல்லும் முன்பாக இன்றைய தினம் நம்மால்  இயன்ற அளவு குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்தால் கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு/

vinayagar

சங்கடஹர சதுர்த்தியன்று முறையாக விநாயகரை வழிபட நெடுங்காலமாக தீராத பிரச்சனைகள் தீரும். நம் துன்பங்களை போக்கி நிலையான சந்தோஷத்தை அருளுவார். நீடித்த ஆயுள், நிலையான செல்வம்,குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு, புத்திக்கூர்மை , நன்மக்கட்பேறு போன்ற பல விதமான வளங்களை வழங்குவார். குறிப்பாக சனிதசை நடப்பவர்களுக்கு சங்கடஹரசதுர்த்தி விரதம் ஒரு வரப்பிரசாதம். விநாயகரை வழிபட்டு சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம்.