இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படாது.. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !

 

இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படாது.. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 31 ஆம் தேதி மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 31 ஆம் தேதி மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு டெல்லியில் நிதித்துறை அதிகாரிகள், வங்கி தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ttn

அப்போது, வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றால் வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு வங்கி ஊழியர்கள் சங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், முன்னதாக அறிவிக்கப்பட்ட படி  வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடக்கும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அறிவித்தார். 

ttn

அதன் படி, இன்று நாடு முழுவதிலும் சுமார் 10,000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது. அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.