இன்றும் அன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்! தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் அதிரடி 

 

இன்றும் அன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்! தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் அதிரடி 

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

anirudh

இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், எனக்கு இது சிறப்பான நாள். பிறந்துவரும்போது இதெல்லாம் நடக்குமா என்று நினைத்திருப்போம். ஆனால் என்னுடைய கனவு நனவாகியுள்ளது. தலைவர் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது கனவு. வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. வரும் பொங்கல் செம ட்ரீட்டா இருக்கும் என நம்புகிறேன். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். நான் தியேட்டரில் பார்த்த முதல் படம் அண்ணாமலை” என தெரிவித்துள்ளார்.