இன்னைக்கு மதியம் சரியா 12 மணிக்கு எல்லா ரெயிலும் 1 நிமிஷம் நிற்கும்… இங்கில்ல நம்ம பங்காளி நாட்டுலதான்…

 

இன்னைக்கு மதியம் சரியா 12 மணிக்கு எல்லா ரெயிலும் 1 நிமிஷம் நிற்கும்… இங்கில்ல நம்ம பங்காளி நாட்டுலதான்…

இந்தியா காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதை எதிர்த்து இன்று பாகிஸ்தான் அரசு அந்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக மதியம் 12 மணிக்கு அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என அந்நாட்டு ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் மற்றும் அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என்ற இந்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் புலம்பி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. ஆனால் அங்கு பாகிஸ்தானுக்கு தோல்விதான் கிடைத்தது. மேலும், முஸ்லிம் நாடுகளாவது நமக்கு சப்போர்ட் செய்யும் என கனவில் பாகிஸ்தான் இருந்தது. ஆனாலும் அதிலும் மண் விழுந்து விட்டது. 

சேக் ரஷீத் அகமது

இந்நிலையில்,370வது சட்டப்பிரிவை ரத்து செய்தற்கு எதிராகவும், காஷ்மீர் சகோதரர்களுடான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானில்  இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் 12.30 வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் நாடாளுமன்ற சபாநாயகர் பக்கர் இமாம் கூறுகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மதியம் 12 மணி முதல் 12.30 வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

காஷ்மீர்

பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் சேக் ரஷீத் அகமது கூறுகையில், இன்று மதியம் அனைத்து ரயில்களும் 1 நிமிடம் நிறுத்தப்படும் என் தெரிவித்தார். ஐ.எஸ்.பி.ஆர். இயக்குனர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரின் தேசிய கீதம் வெள்ளிக்கிழமை மதியம் இசைக்கப்படும் என அறிவித்தார்.