இன்னைக்கு தேசிய கேர்ள் ஃபிரண்ட் தினமாம்! ட்விட்டர் ட்ரெண்டும் இதாங்க…

இன்னைக்கு தேசிய கேர்ள் ஃபிரண்ட் தினமாம்! ட்விட்டர் ட்ரெண்டும் இதாங்க…

இன்று பெண் நண்பர்கள் தினம். இந்த செய்தியையே ட்விட்டரை பார்த்துதான் தெரிஞ்சுக்க வேண்டியதா.. இருக்கு! ட்விட்டர் ட்ரெண்டிலிருக்கும் #NationalGirlfriendDay என்ற ஹேஷ்டேக்கில் பலர் அவர்களது கேர்ள் பிரண்ட் பற்றிய பதிவுகளை பதிவிட்டுள்ளனர். 

‘கேர்ள் ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அட…லவ்வர்தானே! என்றுதானே பலரின் மனம் நினைக்கும். ரத்த சொந்தங்களிடம் கூட இல்லாத ஒரு பிணைப்பு, நண்பர்களிடம் என்றுமே உண்டு. அது எதிர்பாலினத்து நட்பு என்றால், இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். அதுதான் இயற்கை. அதை கொண்டாடுவது அவசியம். அதற்காகதான் இந்த கேர்ள் ஃப்ரெண்ட் டே… 

சிலருடைய டிக்‌ஷனரியில் கேர்ள் ஃபிரெண்ட் என்றால் லவ்வர், சிலருடைய டிக்‌ஷனரியில் அது தோழி, இன்னும் சிலருக்கு கேர்ள் ஃபிரெண்ட் என்றால் பெஸ்டீ…. இப்படி பல கோணங்கள் ஆனால் அர்த்தம் ஒரு எதிர்பாலின உறவு அவ்வளவுதாங்க… உதாரணத்துக்கு பிரியமான தோழி, மாதவன் ஸ்ரீதேவி நட்பு, ஆட்டோகிராஃப் சேரன், சிநேக நட்பக்கூட எடுத்துகலாம். 

ஓப்பனா சொல்லனும்னா…. சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள, உணர்வுகளை புரிந்துக்கொள்ள, தினமும் நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து கொள்ள, உதவி செய்ய… இத்தகைய தேவைகளுக்கு கேர்ள்  ஃபிரண்ட் தேவைப்படுகிறது. சின்ன சின்ன சீண்டல்கள், சின்ன சின்ன சண்டைகள், ஆர்ப்பாட்டம், கோவம் என அனைத்துமே இந்த ஆண்- பெண் நட்புக்கு உண்டு 

நட்பு என்பது பின்னாளில் தோன்றப்போகும் காதலுக்கான அஸ்திவாரமாகத்தான் பல திரைப்படங்களிலும் காட்டப்படுகிறது. அதுவும் சிலருக்கு நடக்கிறது. என் நண்பன் இருக்கான் என ஒரு பெண்ணும், என் பெஸ்டீ இருக்கா என  சொல்லி கெத் காட்டும் கைஸூம் இன்றும் இருக்கிறார்கள். இதற்காக இந்த தினம் கொண்டாடுவதில் தப்பே இல்லை…!