இன்னைக்கு இருக்கு கச்சேரி… வெளுத்துக் கட்டக் காத்திருக்கும் நிர்வாகிகளால் பீதியில் எடப்பாடி -ஓ.பி.எஸ்..!

 

இன்னைக்கு இருக்கு கச்சேரி… வெளுத்துக் கட்டக் காத்திருக்கும் நிர்வாகிகளால்  பீதியில் எடப்பாடி -ஓ.பி.எஸ்..!

சிலர் தலையாட்டி வைத்தாலும், பொதுக் கூட்டத்தில் எடப்பாடி ,ஓ.பிஎஸ் தரப்பை வெளுத்து வாங்கும் முடிவில் இருக்கிறார்கள்.

பரபரப்பான நிலையில் இன்று கூட உள்ளது அதிமுக பொதுக்குழு.  இந்த  முக்கிய கூட்டத்தில் யார் யார் வில்லங்கமான கேள்விகளை கேட்பார்கள் என்ற பட்டியலும், டி.டி.வி.தினகரனுடன்  உள்ள தொடர்பு, ஓ.பிஎஸுடன் உள்ள ரகசிய தொடர்பு,  ஆதரவாளர்கள் பட்டியல் என அனைத்தும் எடுத்து தயாராக வைத்து இருக்கிறது எடப்பாடி தரப்பு. eps

அந்த பட்டியலில் உள்ளவர்களை தங்கள் ஆட்கள் மூலமும் சென்னைக்கு வரவழைத்தும் ஒரு தரப்பு பேசி இருக்கிறது. அதில் வாரிய தலைவர், உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவி, பணம், நிலம், கட்சி பதவி என்ன வேண்டுமோ அதை தருவோம். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு வருகிறது. eps

முக்கிய நபர்களை மடக்க எடப்பாடி ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் தூது சென்று சரிக்கட்டி விட்டதாக கூறுகிறார்கள்.  அப்போதைக்கு சிலர் தலையாட்டி வைத்தாலும்,  பொதுக் கூட்டத்தில்  எடப்பாடி ,ஓ.பிஎஸ் தரப்பை  வெளுத்து வாங்கும் முடிவில் இருக்கிறார்கள். 

அதில் ஒரு தரப்பு, ஓ.பி.எஸை தான் அம்மா  அம்மா நியமித்தார். எடப்பாடியை சசிகலா தான் நியமித்தார். அவரை கட்சியில் இருந்து தூக்கி விட்டோம். அவரால் நியமிக்கப்பட்ட உங்களை எப்படி ஏற்க முடியும்? தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மக்கள் இன்னும் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மாவால் அதிகம் சுட்டிக்காட்டப்பட்ட நபரான ஓ.பி.எஸை மீண்டும் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டம் வைத்து இருக்கிறார்களாம். OPS

தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை போல காட்டினாலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டத்தில் இந்த ஒருங்கிணைப்பை ஏற்காமல் உள்ளனர். இதனால்தான் மிகப்பபெரிய  தோல்வியை கட்சி சந்தித்தது என்றும் பேசிக் கொள்கிறார்கள். இது எல்லாம் கூட்டத்தில் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.