இன்னும் 50 வருடங்கள் சென்னை காணாமல் போகும்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

இன்னும் 50 வருடங்கள் சென்னை காணாமல் போகும்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலக சுற்று சூழல் தினம் இன்று (ஜூன்5) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்று சூழல் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டாலும்,இந்தியாவில் பெருமளவில் அரசோ,மக்களோ சுற்று சூழல் பற்றிக் கவலைக் கொண்டதாகத் தெரியவில்லை

இன்னும் 50 வருடங்கள் சென்னை காணாமல் போகும்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலக சுற்று சூழல் தினம் இன்று (ஜூன்5) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்று சூழல் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டாலும்,இந்தியாவில் பெருமளவில் அரசோ,மக்களோ சுற்று சூழல் பற்றிக் கவலைக் கொண்டதாகத் தெரியவில்ல

உலக சுற்று சூழல் தினம் இன்று (ஜூன்5)

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் அளவு 50 டிகிரி செல்ஸியஸைத் தொட்டது. தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.ராஜஸ்தானில் இந்த வருடம் அதிகப்பட்சமாக வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸ் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீவிர அனல் காற்று வீசுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு, பூமி வெப்பமாவதால் ஏற்படும் ஆபத்துகளை வருடாவருடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. 

வெயிலின் அளவு 50 டிகிரி செல்ஸியஸைத் தொட்டது.

அதன் அறிக்கையின் படி, உலகின் பனிப் பாறைகள் புவி வெப்பமாவதால் உருகத் துவங்கியிருக்கின்றன. இதே அளவில் வெப்பநிலையும் வருடா வருடம் உயர்ந்துக் கொண்டேயிருந்தால், நாம் மரங்களை வளர்க்க இன்னும் தயங்கக் கொண்டு, இருக்கும் காடுகளையும் அழித்துக் கொண்டிருந்தால் இன்னும் 50 வருடங்களில் கடல் மட்டம் சுமார் 5 மீட்டர் வரையில் உயரும் என்று உலக சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்திருக்கிறது. 

ஒரு சுனாமியையே எதிர்கொண்டு பாதுகாக்கும் அளவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம் நாட்டில் எடுப்பதில்லை. அப்படி கடல் நீரின் மட்டம் 5 மீட்டர் வரையில் உயர்ந்தால், சென்னை இருந்த இடத்திற்கான சுவடே தெரியாத அளவிற்கு நீருக்குள் மூழ்கி அழிந்து விடும்.

 தீவிர அனல் காற்று

சென்னைக்கு மிக அருகில் என்று கவர்ச்சி விளம்பரங்களைப் பார்த்து வந்து விழுந்தவர்கள் எல்லாம், ஏற்கெனவே ஏரிகளிலும், குளங்களிலும் தான் இடம் வாங்கி வசித்து வருகிறார்கள். சென்னை ஒரு அடைமழைக்கே தாங்காத நிலையை நாம் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறோம்… அப்போதும், அரசியல்வாதிகள் போர்கால அடிப்படையில் மீட்பு பணியை ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டே செய்வார்கள்!

எல்லாவற்றும் அரசையே நாமும் குறை சொல்லாமல், நம்மால் இயன்ற அளவிற்கு மரங்களை வளர்ந்து பூமித்தாயைக் காப்போம். இந்த பூமியின் அத்தனை அழகையும், ஆச்சர்யங்களையும் நம் சந்ததியினரையும் அனுபவிக்க செய்வோம். கூடுமானவரை சிறிய தூர பயணத்திற்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். அப்படியும் அவசியம் ஏற்பாட்டால் பொது வாகனங்களைப் பயன்படுத்துவோம். ஹால், கிச்சன், பெட் ரூம் என்று அறைக்கு ஒன்றாய் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிக்கு விடுமுறை கொடுத்து பூமியின் வெப்பநிலை உயர்வதை நம்மால் முடிந்த அளவு குறைப்போம்.